நள்ளிரவு காற்று...

விஷ்ணுபுரம் சரவணன்

Thursday, October 21, 2010

பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்துள்ளோம்.


நாங்கள் இப்பூமியின் கோமாளிகள். உறவுகளற்ற தாய்மார்கள். எங்களுக்கு உடல்கள் இல்லை. . நிலமில்லை. திசைகளும் இல்லை. வனப்பறவைகளாக மிதந்தலலகிறோம். எங்களிடமிருந்த தானியங்கள் களவாடப்பட்டுவிட்டன. இருந்தும் பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்துள்ளோம். அது முளைதெழுந்து தானியங்களின் கூட்டமாய் வரும். நநங்களே உலகின் தொன்மையயன இனம். அசிங்களள அருவருப்பானவற்றை நிலமெங்கும் எம் கலையுடலால் சுமந்து வருகிறோம். தேசத்தின் ஆட்சியயளர்கள் விரும்பும் கொடிவழி உறவற்ற அடிமைகளாக வாழ்கிறோம். எனினும் கோமாளி எனும் அன்னை நாங்கள். அதிகாரம் பருகும் மனிதர்களுக்கு அசிங்கங்களள ரசிப்பதற்கு ஓர் உயிர் தேவைப்பட்டதால் எங்களை நகை வெளியின் பாத்திரங்களாக்கினார்கள். வசைமொழியினனயும் காழ்ப்புணர்ச்சிகளையும் பொறாமைகளையும் கருத்துருவமான பழிவாங்குதல்களையும் எதிர்ப்பின்றி சுமந்து செல்ல அடிமைமிகுந்தவன் வேண்டும். அதற்காக வந்தவர்கள் நாங்கள். மிருகங்களிடமிருந்தும் ஜந்துக்களிமிருந்தும் கோமாளி மொழியைக் கற்றுவந்துள்ளோம். துயரக் கண்களில் அரவணைப்பைக் காண்கிறோம். துன்பத்திலிருந்து விடுபட நினைத்து மறு துன்பத்தால் அரவணைக்கப்படுகிறோம். இப்பிரபஞ்சத்திலுள்ள பபர்வையாளர்கள் தம் கண்ணீரால் இந்த விதூஷகர்களளக் காப்பாற்றுவார்கள். கலையின் மொழிக் கண்ணீருக்குள் அலைவுறுகிறது. எங்களுக்கு பூமியுருண்டையொத்த தலை. கரிசல் காடுகளின் நிலப்பரப்பைக் போன்ற நெற்றி. பட்சிகளளப் போன்ற புருவங்கள். வேடிக்கை, அடிவாங்குதல், வசை சுமத்தல் இவை எங்கள் உதிரத்தில் கலந்துவிட்ட விதிகள். தனியே நாங்கள் ஒருபோதும் சிரித்ததில்லை. நிலத்தில் முகரசி விருட்சங்களில் இமம பதித்து விசும்பிச் சொல்கிறோம். நாங்கள் கலைகளின் அடிமைகள். மிருகவிதூஷக நிலலயெடுத்து நாடக நிலத்திற்கு வருகிறோம்..



மிருக விதூஷகம் " பற்றி அதன் இயக்குணர் ச.முருகபூபதி...



வரும் ஞாயிறு தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மய்யதில் இந்நாடகம் நடக்கவிருக்கிறது. [மாலை 6 மணிக்கு]

Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 8:36 AM 0 COMMENTS

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home