நள்ளிரவு காற்று...
விஷ்ணுபுரம் சரவணன்
Monday, October 10, 2011
கழுமரம்.

.06 கணுமுடிவில்
கூர் என்று ஏற்றிவிட்டார்கள்
அவர்களை..
அதற்கு முன்
இருநிறங்களால் கோடுகள் வரைந்திருந்தனர்
அவர்கள் உடல்களின்மீது
விழிநீரில் கலந்த
வியர்வை வீச்சத்தை அமுக்க
மல்லிகை வாசம் அப்பியிருந்தனர்
முதலில் உந்தி தள்ளப்பட்டவள்
சூல்கொண்ட பெண்
அவர்களில் ஒருவன்
அப்போதுதான் மீசை அரும்பியவன்
பசித்து களைத்த கைகுழந்தை
வதைவாங்கி களைத்த கணவன்
இருவரையும் தேற்றுவதற்கு சக்தியற்ற பெண்
மல்லிகையை மீறி
உப்புச காற்றின் அறம் வீச
சிலர் உதிர்க்கப்பட்டனர்
சிலர் மரத்தின் அடியில் விலங்கோடு
கணுக்கள் பல கடந்தும்
தென்படாததால் கூர் இல்லையென
மூவரும் ஆசுவாசிக்க
21 ம் கணுமுடிவில் கூர் என்று
ஓலை வந்திருக்கிறது
எல்லோருமே காத்திருக்கின்றனர்
கழுமரத்தின்
எடைக்கு எடை வெங்காயம் தருவதாக
கூவுகிறவனின் குரலுக்காக..
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 8:22 AM 0 COMMENTS
0 Comments:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home